பணிப்புறக்கணப்பில் ஈடுபட்டுள்ள விமான நிலைய சொகுசு பேருந்து சாரதிகள்
விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் 187 வழி எண் சொகுசு பேருந்தின் சாரதிகள் பணிப்புறக்கணப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுநாயக்க 18ஆவது மைல்கல் சந்தியில் பயணிகளை பேருந்துகளில் ஏற்றிச் செல்வதற்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தடை விதித்ததன் காரணமாக பணிப்புறக்கணப்பில் சாரதிகள் ஈடுபட்டுள்ளனர்.
விமான நிலையம் - கோட்டை பாதையில் சுமார் 71 சொகுசு பேருந்துகள் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக பயணிக்கின்றன.
பேருந்து உரிமையாளர்கள் விசனம்
விமான நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அந்த பேருந்துகளுக்கு பயணிகள் ஏற்றும் பிரதான பேருந்து நிலையமாக நீர்கொழும்பு வீதியில் அமைந்துள்ள 18 ஆவது மைல்கல் சந்தியில் உள்ள பேருந்து நிறுத்துமிடமே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மாகாண போக்குவரத்து அதிகாரசபையால் அந்த பேருந்து நிலையத்தில் இருந்து சொகுசு பேருந்துகளுக்கு பயணிகளை ஏற்றிச் செல்ல தடை விதித்துள்ளமையால் பேருந்து உரிமையாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
18வது மைல்கல் பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல மறுப்பதால் சொகுசு பேருந்துகளின் வருவாய் குறைந்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்க எதிர்பார்க்கும் பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அனைத்து காரணங்களையும் முன்னிறுத்தி நேற்று முதல் பேருந்து சாரதிகள் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
