சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக, உலகளாவிய விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக டுபாய், டோஹா மற்றும் அபுதாபி போன்ற முக்கிய மத்திய கிழக்கு விமான மையங்கள் மூடப்பட்டதால், பல ஆயிரக்கணக்கான பயணிகள் தங்கள் திட்டமிட்ட பயணங்களை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் பல சர்வதேச விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரத்து செய்ததோடு, சில நிறுவனங்கள் விமான அட்டவணைகளை கணிசமாக குறைத்துள்ளன.

எயார் கனடா நிறுவனம் டெல் அவீவ் மற்றும் டுபாய் நோக்கி செல்லும் அனைத்து விமானங்களையும் செப்டம்பர் 7 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
எயார் பிரான்ஸ் விமான சேவை நிறுவனம் டெல் அவீவ் மற்றும் பெய்ரூத் விமானங்கள் ஏப்ரல் 4 வரை, டுபாய் மற்றும் ரியாத் விமானங்கள் மார்ச் 31 வரை ரத்து செய்துள்ளது.
KLM நிறுவனம் டெல் அவீவ், ரியாத், டம்மாம் மற்றும் டுபாய் நோக்கி விமானங்களை மே 17 வரை நிறுத்தியுள்ளது. டெல்டா விமான சேவை நிறுவனம் நியூயார்க்–டெல் அவீவ் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அட்லாண்டா–டெல் அவீவ் சேவை செப்டம்பர் 5 வரை தாமதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் விமான சேவை நிறுவனம் ஏப்ரல் 11 வரை இஸ்ரேலிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் (திரும்பும் சேவைகளும் உட்பட) ரத்து செய்யப்பட்டுள்ளன.
சில முக்கிய இடங்களுக்கு மட்டுமே குறைந்த அளவில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
எமிரேட்ஸ் நிறுவனம், வான்வழி பகுதியளவில் திறக்கப்பட்டுள்ள நிலையில், குறைக்கப்பட்ட அட்டவணையுடன் சேவைகள் இயக்கப்படுகின்றன.
லுப்தான்சா விமான சேவை நிறுவனம், டுபாய் மற்றும் டெல் அவீவ் நோக்கி மே 31 வரை, மேலும் தெஹ்ரான் உள்ளிட்ட பல நகரங்களுக்கு அக்டோபர் 24 வரை சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கட்டார் விமான சேவை நிறுவனம் டொஹா வழியாக சேவைகள் மெதுவாக அதிகரிக்கப்பட்டு, 90-க்கும் மேற்பட்ட இலக்குகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
துருக்கி விமான சேவை நிறுவனம் மார்ச் மாத இறுதி வரை மத்திய கிழக்கு பகுதிகளுக்கான பெரும்பாலான விமானங்களை ரத்து செய்துள்ளது.
இந்த நிலைமை தொடர்ந்தால், உலகளாவிய விமானப் பயணத்துறையில் மேலும் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.