விமானப்படை தலைமையகக் கட்டடம் பொலிஸாரிடம் கையளிப்பு
இலங்கை விமானப்படையின் தலைமையகமாக பயன்படுத்தப்பட்ட கட்டடம் உத்தியோகபூர்வமாக பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில், நேற்றையதினம் (15.03.2024) இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
சுமார் இரண்டு தசாப்தங்களாக இலங்கை விமானப்படையின் தலைமையகமாக பயன்படுத்தப்பட்டு வந்த 12 மாடிகளைக் கொண்ட கட்டடம் 3 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் பொலிஸ் தலைமையகமாக செயற்படவுள்ளது.
ஆவணப் பரிமாற்றம்
உத்தியோகபூர்வமாக கையளித்தல், ஏற்றுக்கொள்ளல் தொடர்பான ஆவணங்களில் விமானப்படை பணிப்பாளர் ஜெனரல் எயார் மார்ஷல் மனோஜ் கப்பெட்டிபொல, பொலிஸ் தலைமையக நிர்வாகப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கலாம் திலகரத்ன உள்ளிட்டோர் கையொப்பமிட்டுள்ளனர்.
அதனையடுத்து, விமானப்படைத் தளபதி மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு இடையில் உரிய ஆவணங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், விமானப்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |