எயார்பஸ் விமான கொள்வனவு இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்சவுக்கு பிணை

CID - Sri Lanka Police Namal Rajapaksa High Court of Sri Lanka Airbus Bribery Scam
By Dhayani Sep 30, 2026 09:16 AM GMT
Report

புதிய இணைப்பு

எயார்பஸ் சம்பவம் தொடர்பாக பணச்சலவை குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சந்தேக நபரான நாமல் ராஜபக்சவை ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 30 மில்லியன் ரூபாய் கொண்ட இரண்டு சரீர பிணையின் கீழ் வெளிச்செல்ல கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன அனுமதித்துள்ளார். 

மேலும், நாமல் ராஜபக்சவுக்கு வெளிநாடுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, இது குறித்து  குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு தெரியப்படுத்தவும் நீதவானால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சாட்சிகளைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என நாமல் ராஜபக்சவுக்கு கடுமையான நிபந்தனையையும் நீதவான்  இதன்போது பிறப்பித்தார். 

இதேவேளை, நாடாளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளில், ஒன்றில் மாத்திரமே அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. 

ஏனைய இரு வழக்குளின் அடிப்படையில், அவரது விளக்கமறியல் உத்தரவு தொடர்கிறது.  


இரண்டாம் இணைப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இன்று (30) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்காக ஏர்பஸ் விமானங்களை வாங்கியபோது நிகழ்ந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை சம்பவத்தில், நாமல் ராஜபக்சவை ஒரு சந்தேகநபராக குற்றப்புலனாய்வுத்துறை பெயரிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று(30) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கமைய சிறைச்சாலைகள் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் அவர், சிறைச்சாலை பேருந்தில் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.  

முதலாம் இணைப்பு

எயார்பஸ் வானூர்தி கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்றைய நீதிமன்ற அமர்வின்போது சமர்ப்பித்துள்ளது.

 நீதிமன்றத்தில் முன்னிலை

இதற்கமைய நாமல் ராஜபக்ச இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

எயார்பஸ் விமான கொள்வனவு இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்சவுக்கு பிணை | Airbus Case Namal Rajapaksa Court Case Today

இதேவேளை, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) செப்டம்பர் 4, 2026 அன்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சர்ச்சையை ஏற்படுத்திய ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சர்ச்சையை ஏற்படுத்திய ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

 

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை மாற்றம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கை மாற்றம் தொடர்பில் முக்கிய தீர்மானம்

YOU MAY LIKE THIS VIDEO..

  




மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US