பதற்றமான பாதுகாப்புச் சூழல்: 3 நாட்களுக்கு தொடரப்போகும் தடை - ஈராக்கின் அதிரடி அறிவிப்பு
மத்திய கிழக்கில் தொடர்ந்து வரும் பதற்ற நிலைக்கு மத்தியில் ஈராக்கின் வான்பரப்பில் வானூர்திப்போக்குவரத்து தடை எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஈராக்கின் சிவில் வானூர்திப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தடை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை நடைமுறையில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈராக்கிற்கு வரும் வானூர்திகள், அங்கிருந்து செல்லும் வானூர்திகள் மற்றும் ஈராக் வான்வழியாகப் பறக்கும் வானூர்திகள் என அனைத்திற்கும் இந்தத் தடை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பதற்றமான பாதுகாப்புச் சூழல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நிலவரத்தைப் பொறுத்து, இந்தத் தடையை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பதை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri