இலங்கையில் காற்றின் தரம் வீழ்ச்சி: விரைந்து மக்களைத் தெளிவூட்டுங்கள் - சஜித் வேண்டுகோள்
நாட்டின் பல பகுதிகளில் காற்றுத் தரச் சுட்டெண் வேகமாகக் குறைந்து வருகின்ற நிலையில், இது தொடர்பில் அரசு விரைந்து மக்களைத் தெளிவூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20.11.2026) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வேகமாகக் குறையும் காற்றின் தரம்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பல பகுதிகளில் காற்றுத் தரச் சுட்டெண் தற்சமயம் வேகமாகக் குறைந்து வருகின்றது.

இத்தகைய சூழ்நிலையில் நாட்டுக்குத் தெளிவான அறிவிப்பொன்றை விடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
காற்றின் தரம் இவ்வாறு வீழ்ச்சியடைவது சுவாச நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்களுக்குப் பாதகமாக அமையும் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பில் அரசு உரிய தெளிவுபடுத்தல் ஒன்றை நாட்டுக்கு வழங்க வேண்டும் என்றும் மேலும் வலியுறுத்தினார்.
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri