இலங்கையின் பல பகுதிகளில் மோசமடையும் நிலைமை - அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்
மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) இன்று (நவம்பர் 20) காலை 10.50 மணிக்கு வெளியிட்ட வளித் தரக் குறியீட்டின் (AQI) படி, நாட்டின் பல பகுதிகளில் வளித் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.
சிலாபத்தில் அதிகபட்சமாக 190 என்ற AQI பெறுமதி பதிவாகியுள்ளது.
மேலும், யாழ்ப்பாணத்தில் 164, திருகோணமலையில் 161, முல்லைத்தீவில் 160, கிளிநொச்சியில் 159 மற்றும் அனுராதபுரத்தில் 156 என்ற பெறுமதிகள் பதிவாகியுள்ளன. இந்தப் பகுதிகளில் காற்றின் தரம் 'ஆரோக்கியமற்றது' (Unhealthy) என்ற பிரிவில் காணப்படுவதால், பொதுமக்களுக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஏனைய சில பகுதிகளில் பதிவான காற்றுத் தரக் குறியீட்டு விபரங்கள்:
- எல்ல – 119
- அக்கரைப்பற்று – 131
- மன்னார் – 132
- பத்தரமுல்ல – 131
- இரத்தினபுரி – 126
- கண்டி – 127
இந்தப் பெறுமதிகள் 'சற்றே ஆரோக்கியமற்றது' (Slightly Unhealthy) என்ற பிரிவில் அடங்குகின்றன.

காற்றுத் தரக் குறியீட்டின் வகைப்பாடு
AQI பெறுமதி - காற்றின் தரம்
- 0 – 50 நல்லது
- 51 – 100 மிதமானது
- 101 – 150 சற்றே ஆரோக்கியமற்றது
- 151 – 200 ஆரோக்கியமற்றது
- 201 – 300 மிகவும் ஆரோக்கியமற்றது
- 301 – 500 அபாயகரமானது
இந்த நிலையில், வளி மாசுபாடு அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், அதனால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri
குக் வித் கோமாளி புகழ் அஷ்வினுக்கு நாளை (நவம்பர் 20) திருமணம்... பெண், பிரபல இயக்குனரின் பேத்தி... Cineulagam