இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் காற்றின் தரம் குறித்து வெளியான தகவல்
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் நல்ல நிலையில் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரக் குறியீடு
அந்த அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு நல்ல நிலையிலும், கொழும்பு 07, குருணாகல், கண்டி, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி, பதுளை மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் நல்ல நிலையிலும் காணப்பட்டது.
அடுத்த 24 மணிநேரத்தில் காற்றின் தரக் குறியீடு 34 மற்றும் 60 க்கு இடையில் இருக்கும். இது பெரும்பாலான நகரங்களில் நல்ல நிலையைக் குறிக்கும்.

காற்றின் தரக் குறைவு ஏற்படும் காலப்பகுதி
அதேவேளை, கொழும்பு 07, யாழ்ப்பாணம், குருணாகல், வவுனியா, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டி மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் மிதமான நிலையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரக் குறியீடு நல்ல நிலையில் இருக்கும்.
அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் ஒரு மணி முதல் 2 மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam