கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் காற்றின் தரம் குறித்து வெளியான தகவல்
கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப் பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையிலும், கொழும்பு 07, யாழ்ப்பாணம், நுவரெலியா, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் நல்ல நிலையிலும் காணப்பட்டது.

காற்றின் தரச் சுட்டெண்
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் தரச் சுட்டெண் 36 மற்றும் 72 க்கு இடையில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெரும்பாலான நகரங்களில் மிதமான அளவிலும், கொழும்பு 07, யாழ்ப்பாணம், வவுனியா, நுவரெலியா, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் நல்ல நிலையிலும் காணப்படும்.
நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரம் மிதமான நிலையில் காணப்படும்.
அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும் குறிப்பாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam