பாக்கு நீரிணையை கடப்பதற்காக பயணத்தை ஆரம்பித்த இலங்கை விமானப்படை வீரர்
இலங்கை விமானப்படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோசன் அபேசுந்தர பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை இன்று அதிகாலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவரின் 50 வருடங்கள் பழமையான கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோசன் அபேசுந்தர நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.
இன்று அதிகாலை 2 மணியளவில் தலைமன்னார் இறங்கு துறையில் இருந்து பாக்கு நீரிணையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ள குறித்த விமானப்படை வீரர் தனுஸ் கோடியை சென்றடைவார்.
பின்னர் அங்கிருந்து மீண்டும் தலைமன்னார் நோக்கி வருகை தர உள்ளார்.
குறித்த வீரர் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மீண்டும் தலைமன்னாரை வந்தடைவார் என தெரிவிக்கப்படுகின்றது.








16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
