திருகோணமலையில் துப்பாக்கியுடன் காணாமல் போயுள்ள விமானப்படை வீரர்
திருகோணமலை - மொரவெவ விமானப்படை முகாமில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த விமானப்படை வீரரொருவர் T-56 துப்பாக்கியுடன் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
மொரவெவ குளத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் ஆரம்ப பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரே நேற்று (19.08.2023) மாலை காணாமல் போயுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மொரவெவ பொலிஸார் விசாரணை
காலி - வக்வெல்ல வீதியை சேர்ந்த 51415 எனும் விமானப்படை இலக்கமுடைய எம்.டி. கவீஷ (22வயது) என்பவரே தலைமறைவாகியுள்ளதாகவும் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த விமானப்படை வீரர் துப்பாக்கியுடன் காணாமல் போய் உள்ளதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம் முறைப்பாடு தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 17 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
