முல்லைத்தீவில் மண்ணகழ்வு இடம்பெற்றுவரு ம் பகுதிகளில் விமானப்படை ரோன் அணி ஆராய்வு!
முல்லைத்தீவில் மண்ணகழ்வு இடம்பெற்றுவரும் பகுதிகளில் இலங்கை விமானப்படையின் ரோன் அணி இன்றையதினம் (9)கண்காணிப்பினை மேற்கொண்டுள்ளது.
யாழ் ஆயர் இல்லத்துக்குச் சொந்தமான முல்லைத்தீவு உப்புமாவெளி பகுதியில் உள்ள மணல் திட்டு நிலங்களிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மண்ணகழ்வு நடவடிக்கைகள் குறித்துக் கண்காணிக்கும் நோக்கோடு பொலிஸ் ,விமானப்படை இணைந்து கண்காணிப்பினை மேற்கொண்டுள்ளனர்.
ஆயர் இல்லத்துக்குச் சொந்தமான காணியில் ஆயிரக்கணக்கான லோட் மண் அகழப்பட்டுக் குவித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர் .
இந்த நிலையிலேயே மேலதிகமாக அந்த பகுதிகளில் கண்காணிப்பை மேற்கொள்ளும் நோக்கோடு
இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.




இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam