நீங்களும் வீட்டில் அல்லது அலுவலகத்தில் குளிரூட்டி (Air Conditioner) உபயோகிப்பவரா..!
அன்றாட வாழ்க்கையில் எமக்கு அத்தியாவசிய தேவைகளில் குளிரூட்டியும் ஒன்றாக அமைந்திருக்கின்றதென்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமே, பெரும்பாலான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின் விசிறி தற்போதைய காலங்களில் பாவனையில் இல்லை. குளிரூட்டி மட்டுமே உபயோகத்தில் செயற்படும்.
அவ்வாறிருக்க, குளிரூட்டி செயலிழந்தால் அன்றைய தினம் இரவு பெற்றோருக்கு சிவராத்திரி தான், பிள்ளைகளை தூங்கவைப்பதென்பது ஒரு பெரிய சவாலாக மாறிவிடும்.
முன்னோர்கள் முன்னெடுத்த நடவடிக்கை
அதேபோன்று எம்முடைய முன்னோர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை காற்றோட்டம் வரக்கூடியவாறு அமைப்பது மட்டுமல்லாது பெரியளவான சொகுசு வாழ்க்கையையும் எதிர்பார்க்காமலே அன்றாட உழைப்பை கடுமையாகவும், தொழில் செய்யும் நிறுவனத்திற்கு நம்பிக்கையாகவும் வழங்கி வந்தனர்.
இருந்த போதும் அவர்கள் நவீன தொழிநுட்பத்தில் பின்தங்கியிருந்தமையும் சுட்டிக்காட்ட வேண்டிய விடயமே. ஆனாலும் ஏதோ ஒரு சேமிப்பை வைத்திருந்தார்கள்.
தற்போதைய அலுவலக ஊழியர்கள் பெரும்பாலானோர் அன்றாட வாழ்க்கை செலவுகளை மட்டுமே மனதில் கொண்டு தொழில் புரிகிறார்களே அன்றி எதிர்கால இலட்சியமோ, தொழில் புரியும் நிறுவனத்திற்கு நம்பகமாகவோ அல்லது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வலு சேர்க்கும் வகையிலோ உழைப்பவர்கள் மிகவும் குறைவு என்பதே யாவரும் அறிந்த உண்மை.
அவ்வாறிருக்க அன்றாட சொகுசு வாழ்க்கையும் அத்தியாவசியமாகி விட்டமையே அவர்களுக்கும் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
குளிரூட்டி செயலிழந்தால் ஏற்படும் தாக்கம்
நாளாந்தம் பெறுமதி மிக்க ஆடைகளையும், அழகுசாதன பொருட்களையும் உபயோகித்து தம்மை அழகுபடுத்தி கொண்டு அலுவலகத்திற்கு வரும் ஆண்கள் அல்லது பெண்கள் அலுவலகத்தில் குளிரூட்டி செயலிழந்த செய்தியை கேட்டாலே அன்றைய தினம் அவர்களின் செயற்திறன் 50% குறைந்து விடுவது மட்டுமல்லாது மின்விசிறி இருக்கும் இடத்தை கைப்பற்றவே 30 நிமிடத்திற்கு முன்பதாகவே அலுவலகத்திற்கு வந்து விடுவார்கள்.
இதேநேரம் சைவ சமயத்தை பின்பற்றும் பெரும்பாலோனோர் அலுவலகம் மற்றும் வீடுகளில் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் சாம்பிராணி புகை பிடிப்பது வழக்கமானதொன்றாகும்.
அவ்வாறு சாம்பிராணி புகை பிடிக்கும் பொழுது குளிரூட்டியின் வடிகட்டியில் படலமாக படியும் அதனால் 10 வருடங்கள் பாவிக்கக்கூடிய குளிரூட்டியை 3 வருடங்கள் உபயோகிப்பதே உறுதி செய்ய முடியாதொன்று என குளிரூட்டி திருத்தும் பணியாளர்கள் கூறுகின்றனர்.
அதேபோன்று வடிகட்டியை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யவும், 2 - 3 மாதங்களுக்கு ஒருமுறை பராமரிப்பையும் மேற்கொண்டால் திடீர் செயலிழப்பை தடுக்கலாம் என்றும், குளிரூட்டியின் செயற்திறன் 80 - 100% வரை காணப்படும் என்பதனையும் உறுதியாக கூறுகின்றனர்.

15 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் F-35B பிரித்தானிய போர் விமானம்: அகற்றப்பட்ட தரவுகள் News Lankasri
