போதை விற்ற பணத்தை வாங்குவதும் போதையை விற்பதும் ஒன்றுதானே...! டக்ளஸை நோக்கி ஐங்கரநேசன் கேள்வி
போதைப்பொருளை விற்றவர்களிடம் வாங்கும் காசு மாத்திரம் போதைப்பொருளுடன் தொடர்பற்றதா என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(17.06.2023) இடம்பெற்ற செயலமர்வொன்றில் பங்கேற்று கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இரண்டுக்கும் என்ன வித்தியாசம்
அவர் மேலும் தெரிவித்ததாவது, நாங்கள் போதைப்பொருள் வியாபாரம் செய்யவில்லை. வேறு இயக்கங்கள் போதைப்பொருள் வியாபாரத்தை மேற்கொண்டன.

போதைப்பொருள் வியாபாரிகளிடம் இருந்து நான் பணத்தை பெற்று இயக்கத்தை நடத்தினேன். இப்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட்டம் ஒன்றில் தெரிவித்ததாக பத்திரிகையில் படித்தேன்.
போதைப்பொருளை விற்கவில்லை. ஆனால் போதைப்பொருள் விற்ற பணத்தைப் பெற்றேன். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்று ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri