நாட்டின் கிரிக்கட் துறையை மேம்படுத்தும் நோக்கில் விசேட தொழில்நுட்ப குழு நியமனம்
நாட்டின் கிரிக்கட் துறையை மேம்படுத்தும் நோக்கில் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர்கள் உள்ளடங்கிய தொழில்நுட்ப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், முன்னாள் அணித் தலைவருமான அரவிந்த டி சில்வா இந்தக் குழுவின் தலைவராக கடமையாற்றுகின்றார்.
முன்னாள் கிரிக்கட் ஜாம்பவான்களாக போற்றப்படும் முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார மற்றும் ரொசான் மஹானாம ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
விளையாட்டுத்துறை அமைச்சினால் இந்த தொழில்நுட்ப ஆலோசனை குழு இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சருக்கும், அமைச்சரவையின் அதிகாரிகளுக்கும், தேசிய விளையாட்டுச்சபைக்கும் கிரிக்கட் தொடர்பான சகல விடயங்களுக்கும் ஆலோசனை வழங்கும் பணிகளை இந்தக் குழு முன்னெடுக்க உள்ளது.
உள்நாட்டிலும், சர்வதேச போட்டிகளிலும் மேம்படுவதற்கு இந்தக் குழு உதவிகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan