மனிதவளம் இல்லாத ஏஐ நிறுவனங்கள்: ஆர்ஜென்டினாவின் அதிரடி சட்டமூலம்
ஆர்ஜென்டினாவில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் முழுமையாக இயக்கப்படும் "மனிதர்கள் இல்லாத நிறுவனங்களை" (Non-human corporations) உருவாக்குவதற்கான சட்டமூலத்தை அந்நாட்டு ஜனாதிபதி ஜேவியர் மிலே (Javier Milei) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
உலகிலேயே ஏஐ மூலம் மட்டுமே இயங்கும் நிறுவனங்களுக்காக பிரத்தியேக சட்டம் கொண்டு வரும் முதல் நாடு ஆர்ஜென்டினா ஆகும்.
செயற்கை நுண்ணறிவு
எனினும், இந்த நிறுவனங்கள் முற்றிலும் மனிதர்களின் கட்டுப்பாடின்றி இயங்காது என்று சட்ட வல்லுநர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்த சட்டமூலத்தின்படி, ஏஐ தொழில்நுட்பம் முடிவுகளை எடுத்தாலும், அதன் ஒட்டுமொத்த செயல்பாடுகளைக் கண்காணிக்க ஒரு மனித நிர்வாகி (Human Administrator) இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏஐ அமைப்புகளால் ஏற்படும் எந்தவொரு பாதிப்பு அல்லது இழப்புகளுக்கும் அந்த நிறுவனமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சட்டம் கூறுகிறது.
ஆர்ஜென்டினாவை உலகளாவிய ஏஐ மையமாக மாற்ற ஜனாதிபதி மிலே தொடர்ந்து முயற்சித்து வரும் வேளையில், இந்த புதிய சட்டக் கட்டமைப்பு வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவரும் என்று அரசு தரப்பு நம்புகிறது.
அதே நேரத்தில், வெறும் சட்டங்களை மட்டும் இயற்றாமல், சர்வதேச ஏஐ திறமையாளர்களை ஈர்த்தால் மட்டுமே ஆர்ஜென்டினா ஏஐ மையமாக மாற முடியும் என்று சில தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam