AI தொழில்நுட்பத்தால் இலங்கை சிறுமிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி, பின்னர் நண்பர்களிடையே பகிரப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பொருத்தமற்ற செயலை 13, 14, 15, 16, 17 வயதுடைய சிறுவர்கள் செய்கிறார்கள் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சட்ட அமலாக்க இயக்குநர் வழக்கறிஞர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பிள்ளைகள்
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகளின் பெற்றோர் முறைப்பாடு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
AI தொழில்நுட்பம்
ஏன் தங்கள் வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்களைத் திருத்தி ஒன்லைனில் பதிவேற்ற AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டபோது, அதை முயற்சிக்க விளையாட்டதாக செய்ததாகக் கூறுகிறார்கள்.
அதனை செய்த சிறுவர்களும் பாதிக்கப்பட்ட சிறுமிகளும் ஒரே வயதுடைய நண்பர்களாகும்.
இவை அந்த சிறுமிகளுக்கு தெரியாமல் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யும் மோசமான செயல் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
