கிளிநொச்சி மாவட்டத்திற்கான விவசாய குழுக் கூட்டம் (Video)
கிளிநொச்சி மாவட்டத்திற்கான விவசாய குழுக்கூட்டம் அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலானது இன்று (20-07-2023) நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில், மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கை மற்றும் ஏனைய விவசாய செய்கை தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
குறிப்பாக சிறுபோக பயிர் செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் விவசாய செய்கை தொடர்பில் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
விவசாய துறைசார் திட்டங்கள்
இதேவேளை இவ்வாண்டுக்குரிய இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக செய்கையில் விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் மேலதிக செய்கைகள் தொடர்பில் ஆராயும் வகையில் மாவட்ட அரச அதிபரால் நியமிக்கப்பட்ட பிரதிஆணையாளர், பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், கரைச்சி பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர், கண்டாவளை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர், ஆகியோர் உள்ளடங்கிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கையும் சமர்ப்பிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நீர்ப்பாசன பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய துறைசார்ந்த திணைக்களங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் மாவட்ட விவசாய பணிப்பாளர்,நீர்ப்பாசன பொறியியலளர் பிரதி ஆணையாளர் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் பிரதிநிதி, பிரதேச செயலாளர்கள்,துறைசார்ந்த திணைக்கள தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
