இவ்வருடத்திற்கான யாழ். மாவட்ட விவசாய மீளாய்வு கூட்டம்(Photos)
யாழ்ப்பாண மாவட்டத்தின் 2023ஆம் ஆண்டுக்கான விவசாய மீளாய்வு கூட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பாலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர கலந்து கொண்டார்.
இங்கு 2023ஆம் ஆண்டில் விவசாயிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளாக விதையினம் பெறுதல், எரிபொருள், உரம் பெறுதல் தொடர்பாகவும், அவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈடு பெற்றுக் கொடுத்தல் பற்றியும், 2024 ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள விவசாய முன்னேற்றம் தொடர்பாகவும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன.
விவசாயிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகள்
அத்துடன் ஏற்றுமதி, இறக்குமதிக்கான சந்தைவாய்ப்பு எற்படுத்திக் கொடுத்தல் பற்றியும் கலந்துறையாடப்பட்டது. குறிப்பாக வெங்காயம், மிளகாய், உருளைக்கிழங்கு, பழச்செய்கை, கோப்பி, கறுவா, கச்சான், பயறு, உழுந்து, குரக்கன் போன்ற பயிர்ச்செய்கையினை மேற்கொள்ளும் விவசாய உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடப்பட்டன.
இதேவேளை, நேற்றையதினம் யாழ்ப்பாணம்
மாவட்ட விவசாய பணிப்பாளரினால் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு
இன்று இடம்பெறும் விவசாய கூட்டத்தில் சந்தைகளில் விவசாயிகளிடம் அறவிடப்படும்
10% கழிவு நடைமுறை தொடர்பில் இன்றைய கூட்டத்தில் வாய் திறக்க வேண்டாம் என
அறிவுறுத்தியதாக குறிப்பிடப்படுகின்றது.
இன்றைய கூட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மாத்திரமே கூட்டத்தில் பங்குபற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நீண்ட காலமாக இந்த 10% கழிவு நடைமுறை தொடர்பில் நாங்கள் கூட்டங்களில் தெரிவிக்கின்ற போதிலும் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கவலை வெளியிட்டனர்.
குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம் சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் பந்துலசேன, பிரதேச செயலர்கள், துறைசார் திணைக்கள தலைவர்கள் கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
ஏற்றுமதி தரச் சான்றிதழ்
இதேவேளை, வடக்கு விவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதழ் பெறுவதை இலகுபடுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர், விவசாய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதில் வடக்கு விவசாயிகள் கடும் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் எனவேவிவசாயிகள் ஏற்றுமதி தரச் சான்றிதல் பெறுவதை இலகுபடுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் விவசாய அமைச்சர் மஹிந்த அமர வீரவிடம் கோரிக்கை விடுத்தார்.
இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெறுகின்ற விவசாய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்படி கோரிக்கையினை முன் வைத்தார்.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள், அதில் முக்கியமாக இந்த ஏற்றுமதிக்கான தரச் சான்றிதழ் பெறுவதில் பல இடர்பாடுகளை எதிர் நோக்குகின்றார்கள். அந்த தர சான்றிதழை பெறுவதற்காக நீண்ட தூரம் கொழும்பிற்கு பயணம் மேற்கொண்டு தங்களுடைய தரச் சான்றிதழை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
எனவே அதனை இலகுபடுத்தி இலகுவான முறையில் தங்களுடைய ஏற்றுமதி தர சான்றிதழ் பெறுவதற்கு ஆவண செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளியிடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகின்றது.
எனவே அவ்வாறு விற்பனை செய்யப்படும் போது அந்த பொருட்களுக்கான விலை நிர்ணயத்தினையும் கருத்தில் கொள்ளுமாறும்,கோரிக்கை விடுத்தார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளுக்கு எதிர்வரும் 2024 பாதீட்டில் மானிய அடிப்படையில் மண்ணெண்ணை பெற்றுக் கொடுப்பதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்திருந்தார்.
குறித்த குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் விவசாயிகள் சார்பில் முன்வைத்த கோரிக்கைக்கு அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அமைச்சரிடம் தெரிவிக்கையில்,
“யாழ்ப்பாண மாவட்டத்தில் கிணறுகளை நம்பியே விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் சிறுபோக பயிர்செய்கைக்கான மண்ணெண்ணையில் இயங்கும் நீர்ப்பம்பிகளை விவசாயிகள் காலங்காலமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போதைய எரிபொருள் விலையேற்றத்தாலும், கடந்தாண்டு ஏற்பட்ட நெருக்கடி நிலையிலும் எமது விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு விரக்தி நிலைக்கு சென்றிருந்தார்கள்.
மீனவர்களுக்கு மாநில அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுவது போல் யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளுக்கும் மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை முன்வைக்கின்றேன்” என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் வருடம் 2024
பாதீட்டில் யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு மண்ணெண்ணெய் மானிய அடிப்படையில்
வழங்குவதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதாகத் தெரிவித்திருந்தார்.










ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
