யாழில் இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கைகள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்தவாரம் வலிகாமம் வடக்கில் படையினர் வசமிருந்த காணி நிலங்கள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து குறித்த காணி நிலங்களில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் குறித்த காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவரும் மக்களுக்கு அவற்றை முன்னெடுப்பதற்கான ஏதுநிலைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது.
விடுவிக்கப்பட்ட காணி நிலங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதேச மக்களை அழைத்து அவர்களின் எண்ணப்படுகளை அறிந்துகொள்ளும் முகமாக ஒட்டகப்புல அமலஉற்பவ தேவாலையத்தில் இன்றையதினம் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
உயர்பாதுகாப்பு வலயம்
முன்னதாக வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேசத்தில் சுமார் 30 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த சுமார் 234.83 ஏக்கர் காணி நிலங்கள் கடந்தவாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் விடுவிக்கப்பட்டது.
இதன்போது மக்கள் தங்களுடைய ஏனைய காணிகளும் அத்துடன் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள மானம்பிராய் பிள்ளையார் ஆலய வழிபாடுகளுக்கும் இராணுவத்தினர் வெள்ளிக்கிழமைகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர் .
ஏணைய காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும், மக்கள் மீளக்கூடிய ஏதுவான வசதிகள் செய்யப்பட வேண்டும் , உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும், அச்சுவேலி தெல்லிப்பழை பிரதான வீதி திறக்கப்பட வேண்டும் , போன்ற கோரிக்கைகளை மக்கள் அமைச்சரிடம் முன் வைத்தனர். இதற்கு அமைச்சர் சாதகமான பதிலை வழங்கி விரைவில் சாத்தியமாகும் என தெரிவித்தார்.














தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri

ஒரே வாரத்தில் ரூ.48,000 கோடி லாபம்! அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அடைந்துள்ள புதிய உச்சம்! News Lankasri
