இந்தியாவுடன் ஒப்பந்தம்: விசாரணைக்கு வரும் எதிர்ப்பு வழக்கு
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லுபடியற்றது என உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்கள், 2025 ஜூன் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
2025, ஏப்ரல் 5ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், இந்த ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.
பாதுகாப்பு ஒத்துழைப்பு, டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்வது மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான பல்துறை மானிய உதவி உள்ளிட்ட இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதில் அடங்கியிருந்தன.
பிரதிவாதிகள்
இந்தநிலையில், நேற்று இந்த வழக்குகள், உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை ஜூன் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தேசபக்தி தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர மற்றும் வினிவிட அறக்கட்டளையின் பொருளாளர் சுனில் ஜெயசுந்தர உள்ளிட்ட மனுதாரர்கள் குழு இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சரவை உறுப்பினர்கள், சட்டமா அதிபர் மற்றும் பலரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு இந்த மனுக்கள் தாக்கல் செய்யபட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



