உள்ளூராட்சி சபைகளுக்கான அதிகாரத்தை நிறுவ ரணில் - சஜித் இடையே இணக்கப்பாடு
2025 உள்ளூராட்சித் தேர்தலில், எதிர்க்கட்சி பெரும்பான்மை அதிகாரத்தைப் பெற்ற உள்ளூராட்சி அமைப்புகளுக்கு, எதிர்க்கட்சியின் பிற கட்சிகளுடன் இணைந்து அதிகாரத்தை நிறுவ ஐக்கிய தேசியக் கட்சியும்(UNP) ஐக்கிய மக்கள் சக்தியும்(SJB) ஒப்புக் கொண்டுள்ளன.
உள்ளூராட்சித் தேர்தலில் நாட்டு மக்கள் எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கிய உள்ளூராட்சி அமைப்புகளில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக இன்று (19) நடைபெற்ற சிறப்புக் கலந்துரையாடலின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெளியிட்ட கூட்டறிக்கையில்...
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான முடிவு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
