இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடன் குழுவிற்கும் இடையில் முக்கிய உடன்பாடு! அமெரிக்கா வரவேற்பு
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அளவுருக்களுக்கு ஏற்ப, கடனை மறுசீரமைப்பதற்கான விதிமுறைகள் தொடர்பில், இலங்கைக்கும் உத்தியோகபூர்வ கடன் குழுவிற்கும் இடையில் எட்டப்பட்ட கொள்கை உடன்பாட்டை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இந்த வரவேற்பை வெளியிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் இலங்கைக்கான பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான சாத்தியமான பாதையை ஏற்படுத்தியுள்ளது என்று சங் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புப் பொதியின் அடுத்த தவணையை இலங்கை பெற்றுக்கொள்வதற்கு இந்த உடன்படிக்கை முக்கியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் பொருளாதார ஸ்திரப்படுத்தல், மீட்பு மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு மிகவும் தேவையான நிதி உதவியை இந்த உடன்படிக்கை பெற்றுக்கொடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.