பிரதமரின் தலைமையில் 'புதுபுத் மாபிய ஹரசர' ஓய்வூதிய திட்டத்திற்காக ஒப்பந்தம் கைச்சாத்து

Agreement Mahinda Rajapaksa Pension Perants
By Kanamirtha Jan 04, 2022 05:00 PM GMT
Report

'புதுபுத் மாபிய ஹரசர' மற்றும் 'புதுபுத் ஹரசர பூஜா' சமூகப் பாதுகாப்பு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று (04) புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது.

பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும மற்றும் இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் தலைவர் சுமன் ஹதராகம ஆகியோருக்கிடையே இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

சம்புத்த சாசனத்திற்கு தமது பிள்ளைகளைத் தியாகம் செய்யும் 25-59 வயதிற்குட்பட்ட பிக்குமார்கள் மற்றும் பிக்குனிமார்களின் பெற்றோருக்காக அவர்களின் பாதுகாப்பிற்காக இந்த விசேட ஓய்வூதிய திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

சமூகப் பாதுகாப்புச் சபையின் கீழ் பலன்களைச் செலுத்தும் இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கமைய பங்களிப்பாளர்கள் மற்றும் பல்வேறு பரோபகாரர்களின் தேவைகளைப் பொறுத்து, 60 வயதின் பின்னர் கிடைக்கும் வகையில் வேண்டிய தொகையில் ஓய்வூதிய திட்டமிடக் கூடியமை இதன் விசேடம்சமாகும்.

2022 புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிப்பதற்காக புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சுக்கு வருகை தந்த பிரதமர் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன மற்றும் ஏனைய பணியாளர்களால் வரவேற்கப்பட்டதுடன், பிரித் பாராயண நிகழ்வும் சர்வமத ஆசீர்வாத பூஜையும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 'புதுபுத் மாபிய ஹரசர' மற்றும் 'புதுபுத் ஹரசர பூஜா' சமூகப் பாதுகாப்பு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

புத்த சாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் வகிபாகம் குறித்த சுருக்கமான முன்னேற்ற அறிக்கை, அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்களினால் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து விகாரைகளினதும் கழிவறை வசதிகளை ஆராய்ந்து, அந்த வசதிகள் முறையாக இல்லாத விகாரைகளுக்கு, அந்த வசதிகளை முறைப்படுத்துமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது அமைச்சு அதிகாரிகளுக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.

இத்ததெதமலியே இந்தசர தேரர், கலகம தம்மரங்சி தேரர், கலாநிதி அக்ரஹெர கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் மற்றும் கலாநிதி இராமசந்திர ஐயர் வீரபாண்டியன் ஐயர் குருக்கள், அல்ஹாஜ் ஹசன் மௌலானா மௌலவி, கலாநிதி அருட்தந்தை சிக்ஸ்டஸ் நிகலஸ் பெர்னாண்டோ குருகுலசூரிய உள்ளிட்ட சர்வத மதத்தலைவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ஆசீர்வதித்திருந்தனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பிரதமரின் சமய அலுவல்கள் ஒருங்கிணைப்பு செயலாளர் ஏ.எம்.ரத்நாயக்க, மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் தரணி அனோஜா கமகே, தாமரை தடாக மகிந்த ராஜபக்ச அரங்கின் பணிப்பாளர் பிரிகேடியர் சுஜித் பாலசந்திர, இந்து சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US