ஆசிரியர்களுக்கான நியமனங்கள் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள இணக்கம்
எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு அதிபர், ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் நியமனங்களை வழங்குவது சிறந்த யோசனை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்யே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போதுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு தமக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு நியமனத்தை மாற்றித் தருமாறு அதிபர் மற்றும் ஆசிரியர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை உண்மையில் சிறந்ததொரு யோசனையாகும்.
எவ்வாறிருப்பினும், அதிபர், ஆசிரியர்களுக்கு மாத்திரம் அதனை செயற்படுத்த முடியாது. மாணவர்களும் இந்த திட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.
எனவே, இது இலகுவாக நடைமுறைப்படுத்தப்படக்கூடிய விடயமல்ல.
காரணம், நாட்டில் சுமார் 45 இலட்சம் மாணவர்களும், 2 இலட்சத்து 45,000 ஆசிரியர்களும் உள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் சமமான வகையில் இதுகுறித்த தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
