இலங்கையில் மீண்டும் வெடிக்கவுள்ள கலவரம்! முன்கூட்டியே விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Sri Lanka Parliament Champika Ranawaka Sri Lankan protests Sri Lanka Economic Crisis Sri Lanka
By Dhayani May 22, 2022 10:16 PM GMT
Report
Courtesy: virakesari

நாடு முற்றாக வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதுடன், எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்கும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி வரும். இறுதியில் பொருட்களை பெற்றுக்கொள்வது மக்கள் மத்தியில் கலவரமாக தோற்றம் பெறும் வாய்ப்புள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற 43 ஆவது படையணியின் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்த அவர் , மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் முறையான திட்டமிடல் மற்றும் முகாமைத்துவம் இன்மையால் நாடு முழுமையாக வங்குரோத்து நிலையை அடைந்து விட்டது. நேச நாடுகளான சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவிடம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் மீள் செலுத்தப்படாது என்று ஏப்ரல் மாதம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இலங்கையில் மீண்டும் வெடிக்கவுள்ள கலவரம்! முன்கூட்டியே விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Against Sri Lanka Violence June 2022

ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை மீள் செலுத்தமல் புதிய கடன்களை பெற்று கொள்வது பொருத்தமற்றது. தற்போது இது தொடர்பாக தனது அதிருப்திகளை சீனா வெளியிட்டு இருக்கிறது. மேலும் சீனாவிற்கு இவ்வருட இறுதி காலப்பகுதிக்குள் மொத்தமாக சுமார் 920 மில்லியன் டொலர்கள் செலுத்த வேண்டியிருக்கிறது.

இலங்கைக்கு உலக வங்கி தற்போது 400 மில்லியன் . டொ லர்களை வழங்குவதாக தெரிவித்த நிலையில் அதில் ஒரு பகுதியை கொண்டு எரிபொருள், எரிவாயு, மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யலாம்.

இலங்கையில் மீண்டும் வெடிக்கவுள்ள கலவரம்! முன்கூட்டியே விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Against Sri Lanka Violence June 2022

இதன் மூலம் தற்காலிகமாக இப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டாலும் மீண்டும் பொருட்களுக்கு தட்டுப்பாடு மற்றும் வரிசையில் நிற்கும் யுகம் தோன்றும். உலக சந்தையில் எரிவாயு உட்பட பல பொருட்களுக்கான விலைகள் குறைவடைந்துள்ள நிலையில் இலங்கையில் மாத்திரம் அதிக விலைக்கு கொடுத்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமையில் நாட்டு மக்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஜூன் மாதம் நடுப்பகுதியில் நிச்சயமாக மீண்டும் ஒரு தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகும். அது நிச்சயமாக பாரியளவில் ஒரு கலவரமாக தோற்றம் பெறும்.

இலங்கையில் மீண்டும் வெடிக்கவுள்ள கலவரம்! முன்கூட்டியே விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Against Sri Lanka Violence June 2022

பொருட்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பொருளாதார நெருக்கடியை தாங்கிக் கொள்ள முடியாத மக்களால் எரிபொருள், எரிவாயு, மருந்து பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த கலவரம் உருவாகும் என்பது உறுதி.

இதனால் இது கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் போல் இல்லாமல் அரசியல்வாதிகள் சொத்துக்கள் மட்டும் அன்றி நாட்டில் உள்ள அனைவரினதும் சொத்துகளும் கொள்ளையிடப்படும்.

இலங்கையில் மீண்டும் வெடிக்கவுள்ள கலவரம்! முன்கூட்டியே விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Against Sri Lanka Violence June 2022

நாடு தற்போது பாதாளத்துக்குள் தள்ளப்பட்டு விட்டது. நாட்டுக்குகிடைக்கபெறும் டொலர்களை கொண்டு மக்களுக்கு எரிபொருள், எரிவாயு பெற்றுத் தருவதாக கூறி மக்களை ஏமாற்றுவதை விடுத்து நாட்டை கட்டியெழுப்ப முறையான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை பெற வேண்டும். சர்வ கட்சிகளையும் இணைத்து அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

இலங்கையில் மீண்டும் வெடிக்கவுள்ள கலவரம்! முன்கூட்டியே விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Against Sri Lanka Violence June 2022

100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US