போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் (Photos)
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட விசுவமடு பிரதேசத்தில் அண்மை நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வாள்வெட்டு சம்பவத்தினால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும், பெண் பிள்ளைகள் வீதியால் செல்லமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்து விசுவமடு பிரதேச வர்த்தக சங்கத்தினர் பொது அமைப்புக்கள் கிராம மக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.
வணிக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்கம் வரை பேரணியாக சென்று அங்கு தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதுடன், ஜனாதிபதி பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஊடகங்களுக்கான அறிக்கையினை வாசித்து காட்டியுள்ளதுடன் அவை பதிவு தபாலில் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
"வீதியால் பெண் பிள்ளைகள் செல்லமுடியாத நிலை, வாள்வெட்டு சம்பவம் என்பற்றின் பின்னால் போதைவஸ்து பாவனையே காரணம், போதைவஸ்து பாவனையினை கட்டுப்படுத்த தவறும் நிலையே இவ்வாறான கொள்ளை மற்றும் வாள்வெட்டிற்கு காரணமாக அமைந்துள்ளது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளுக்கு அனுப்பும் அறிக்கை வாசிக்கப்பட்டுள்ளது. அதில் “சமீப காலமாக போதைப்பொருள் பாவனையால் எமது சமூகம் மிகவும் வேகமாக சீரழித்து வருகின்றது. அத்துடன் தற்போது இதுவரை இல்லாதவாறு வீதி வன்முறைகள் அதிகரித்து வருகின்றது, மக்கள் அனைவரும் ஒருவித பய உணர்வுடன் வாழ்ந்து வருகின்றோம்.
வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு, வாள்வெட்டு சம்பவம் எமது பகுதியில் இடம்பெற்றுள்ளது. திருடர்கள் தொல்லையால் விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் சாதாரணமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள்.
மக்கள் நிம்மதியான தூக்கத்தினைதொலைத் பல நாட்களாயின எமது தமிழ் அரசியல் கட்சிகள் தீர்வுகளை பெற்று தருவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருகின்றது.
மக்களாகிய எங்களுக்கு நிமத்தியான வாழ்விற்கும் போக்குவரத்திற்கும் இளம் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கும் உரிய நடவடிக்கை எடுத்து தருமாறு” மக்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.







புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 38 நிமிடங்கள் முன்
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam