கமல் குணரட்னவின் சார்பில் முன்னிலையாகப் போவதில்லை - சட்ட மா அதிபர்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன ஆகியோரின் சார்பில் முன்னிலையாகப் போவதில்லை என சட்ட மா அதிபர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் பணி இடைநிறுத்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவின் மீதான விசாரணைகளின் போது சட்ட மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் கமல் குணரட்ன மற்றும் சீ.டி. விக்ரமரட்ன ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பரிசீலனை
உச்ச நீதிமன்றில் இந்த மனு நேற்றையதினம் (29.11.2024) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த காலங்களில் கமல் குணரட்ன மற்றும் சீ.டி. விக்ரமரட்னவின் சார்பில் சட்ட மா அதிபர் முன்னிலையாகியிருந்தார்.
இந்த மனு எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி நவாஸ் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தனியார் சட்டத்தரணிகளின் சேவை
எதிர்வரும் காலங்களில் இந்த வழக்கில் பிரதிவாதிகளான கமால் குணரட்ன மற்றும் சீ.டி. விக்ரமரட்ன ஆகியோரின் சார்பில் முன்னிலையாகப் போவதில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
எனவே, பிரதிவாதிகள் தங்களின் சார்பில் தனியார் சட்டத்தரணிகளின் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என நீதியரசர்கள் குழாம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
