பொது தேர்தலின் பின் தொங்கு அரசு உறுதி: சுதந்திர கட்சி குற்றச்சாட்டு
நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியாலும் அறுதிப் பெரும்பான்மையைக்கூட பெற முடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் தெரிவித்துள்ளார்.
தற்போதைய விடவும் குழப்பகரமான தொங்கு அரசே அமையக்கூடும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கூட்டணி கட்சி
"அடுத்த தேர்தல்களில் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை. கூட்டணி அமைப்பது தொடர்பில் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
எனினும், மக்கள் மற்றும் கட்சிக்கு நன்மை பயக்கும் வகையில் எமது முடிவு அமையும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பல அணிகள் இருப்பதால் வாக்குகள் பிரிந்து செல்லும்.
எந்தவொரு கட்சியாலும் 75 ஆசனங்களுக்கு மேல் கைப்பற்ற முடியாத நிலையே ஏற்படும். ஆட்சி அமைப்பதற்காகச் கூட்டு சேர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.