நுவரெலியாவின் ஆலயம் ஒன்றில் 24 வருடங்களின் பின்னர் நடத்தப்பட்ட பூஜை
நுவரெலியா - நானுஓயா, கிளரண்டன் ஆலயத்தில் 24 வருடங்களின் பின்னர் முதன்முறையாக நேற்றையதினம் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த 2000ஆம் ஆண்டு முதல் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நேற்றையதினம்(14) புதன்கிழமை முதன்முறையாக விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
24 வருடங்களின் பிறகு நடைபெற்ற பூஜை
24 ஆண்டுகளாக நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த ஆலயத்தில் தற்போது மீதமுள்ள பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, நேற்றையதினம்(14) ஆலயத்தின் பிரதான நுழைவாயில் கதவு நிலை வைக்கும் நிகழ்வு நடைபெற்று சிறப்பு பூஜைகள் இடம்பெற்றதோடு, தொடர்ந்து கலந்துகொண்ட பக்த அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், ஆலயத்தின் நிர்மாணப் பணிகளுக்கு உதவி செய்தவர்கள், ஆலய பரிபாலன சபையினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |











பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 1 வாரம் முன்

F-1 Visa ரத்து... நூற்றுக்கணக்கான மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற ஆணையிட்ட ட்ரம்ப் நிர்வாகம் News Lankasri

மியான்மர் நிலநடுக்கம்: லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன? 10,000-ஐ தாண்டுமா பலி எண்ணிக்கை? News Lankasri
