இலங்கையுடன் உறவுகளை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன்:தென் ஆபிரிக்க ஜனாதிபதி
இலங்கையுடன் இருந்து வரும் நெருங்கிய உறவுகளை மேலும் அதிகரிக்க அர்ப்பணிப்புடன் இருபபதாக தென் ஆபிரிக்க ஜனாதிபதி மத்தமேலா சிறில் ராம்போஃசா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணிலுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ள தென் ஆபிரிக்க ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் தென் ஆபிரிக்க ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாகியமைக்காக சிறில் ராம்போஃசா இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருந்து வரும் உறவுகளை மேலும் உறுதிப்படுத்துவது தனது அபிலாஷை எனவும் அவர் கூறியுள்ளார்.
தென் ஆபிரிக்கா இலங்கையுடனான உறவுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளது

இலங்கையுடன் இருந்து வரும் உறவுகளுக்கு தொன்று தொட்டு தென் ஆபிரிக்க சிறப்பிடத்தை வழங்கியுள்ளது.
எதிர்காலத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகள், நட்புறவு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வுகளை வலுப்படுத்துவது குறித்து சிறப்பு கவனத்தை செலுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தென் ஆபிரிக்க ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam