பாகிஸ்தானின் தாக்குதல் குற்றச்சாட்டை மறுத்த ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானை குறிவைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியமை தொடர்பில் சர்ச்சைகள் வலுத்துள்ளது.
இதனிடையே குறித்த குற்றச்சாட்டை ஆப்கானிஸ்தான் தற்போது மறுத்துள்ளது.
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேர் கொல்லப்பட்டமைக்கு எதிராக இந்தியா பாகிஸ்தானை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இந்தியா ஏவுகணை தாக்குதல்
இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
இதனையடுத்து இந்தியாவில் பல இடங்களில் பாகிஸ்தானும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே ஆப்கானிஸ்தானை குறிவைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாகிஸ்தானின் குற்றசாட்டை ஆப்கானிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |