பெண்கள் வெளிநாடு சென்று கல்வி கற்பதற்கு தடை விதித்த நாடு!-செய்திகளின் தொகுப்பு
பெண்கள் வெளி நாடுகளுக்கு சென்று கல்வி கற்க, தாலிபான் அமைப்பினர் தடை விதித்துள்ளனர்.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி மற்றும் அதிகாரத்தை, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான் அமைப்பினர் கைப்பற்றினர்.
இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் அமைப்பினர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து ஓராண்டு கடந்து விட்டது. எனினும் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகின்றன.
பெண்களுக்கான கட்டுப்பாடுகள்
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
பெண் குழந்தைகள் 6 ஆம் வகுப்புக்கு மேல் கல்வி கற்பதற்கு தாலிபான்கள் தடை விதித்தது சர்வேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த தடையை திரும்ப பெறக்கோரி உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் தாலிபான்கள் அதை புறக்கணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்பதற்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
கல்விக்காக கஜகஸ்தான் மற்றும் கத்தார் நாட்டுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்துக்கு வந்த மாணவிகளை தாலிபான்கள் விமானத்தில் ஏற விடாமல் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றை மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
