லண்டனில் புலம்பெயர் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்: இலங்கையருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு
மேற்கு லண்டனில் ஆப்கான் அகதியொருவர் 15 முறை கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையர் உட்பட இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2021 நவம்பர் 24 ஆம் திகதி மேற்கு லண்டனில் சவுத்ஹாலில் உள்ள சாலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அகதியான 16 வயது ரிஷ்மீத் சிங் என்பவர் பூங்காவில் நண்பர்களுடன் இருந்த போது தவறான தகவலால் 15 முறை கொடூரமாக தாக்கப்பட்டு குறித்த இளைஞர்களால் கொல்லப்பட்டுள்ளார்.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இந்த வழக்கில் இலங்கையரான 18 வயது வனுஷன் பாலகிருஷ்ணன் மற்றும் இல்யாஸ் சுலைமான் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி, வனுஷன் பாலகிருஷ்ணனுக்கு 24 ஆண்டும், சுலைமானுக்கு 21 ஆண்டும் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய ரிஷ்மீத்தும் அவரது தாயாரும் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியதாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரிஷ்மித் சிங் சட்டவிரோத குழுக்களில் தொடர்புடையவர் அல்ல எனவும், தவறான நேரத்தில் தவறான இடத்தில் சிக்கிக்கொண்டதால், பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார் எனவும் பொலிஸ் தரப்பு நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri