ஆப்கானிஸ்தானில் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவிகள், திருப்பியனுப்பப்பட்டனர்.(காணொளி)
ஆப்கானிஸ்தானில் பல மாதங்களின் பின்னர் மாணவிகள் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சில மணி நேரத்தில் அவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் பெண்களின் கல்வியுரிமை தொடர்பில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர்.
முன்னதாக சிறுவர்கள் மற்றும் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் மட்டுமே பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஏழு மாதங்களுக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் முழுவதும் இன்று 12-19 வயதுடைய பல்லாயிரக்கணக்கான மாணவிகள் மேல்நிலை பாடசாலைகளுக்கு திரும்ப உள்ளதாக தலீபான்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று தலைநகர் காபூல் உட்பட பல மாகாணங்களில் பாடசாலைகளுக்கு மாணவிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் சில மணி நேரங்களில் மாணவிகள் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். தலீபான்களின் உத்தரவின் அடிப்படையில் மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
எனினும் இது குறித்து கருத்து தெரிவிக்க தமக்கு அனுமதி இல்லை என்று ஆப்கானிஸ்தான் கல்வி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஜீஸ் அஹ்மத் ரேயான் தெரிவித்துள்ளார்.
Girls in Afghanistan crying after they were promised their schools would reopen only for the Taliban to lock them out again at the last minute. pic.twitter.com/SuoEpNLz5B
— Heather Barr (@heatherbarr1) March 23, 2022





siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
