நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு யாழ்.பொலிஸாரின் விசேட அறிவிப்பு (PHOTO)
கடந்த இரண்டு வருடங்களின் பின்னர் வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
ஆலய வருடாந்த மகோற்சவத்தின் போது பெருமளவில் பக்தர்கள் ஒன்று கூடுவதனால் திருட்டு சம்பவங்களை தடுக்க கூடியவாறு யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பணிபுரையின் கீழ் விசேட பொலிஸ் அணிகள் சிவில் மற்றும் சீருடையில் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் விடுத்துள்ள அறிவுறுத்தல்

எனினும் நல்லூர் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் பெறுமதியான நகைகளை அணிந்து வருவதை தவிர்ப்பதோடு அதிகளவில் பணத்தினை ஆலயத்திற்கு எடுத்து வருவதையும் தவிர்க்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும்,ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தமது வீடுகளை சரியாக பூட்டி
வீட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி ஆலயத்திற்கு வரும் பட்சத்தில் திருட்டு
சம்பவங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri