இன்றைய காலநிலை தொடர்பான முன் அறிவிப்பு!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (27.04.2023) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன், கிழக்கு மாகாணத்திலும் தென் மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களிலும் காலையிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மழை அல்லது இடியுடன் கூடிய மழை
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று அல்லது மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும்.
இதன்போது, பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தம்மை பாதுகாத்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் பகுதிகளில் காற்றின் வேகம்
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் காற்றானது வடகிழக்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசுவதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் ஓரளவுக்கு மிதமானதாக இருக்கும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 22 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri