எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி! உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்
தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று(03.03.2023) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறையிலுள்ள வீட்டில் தங்கியிருந்த போது உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் உடனடியாக வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர் சிகிச்சை
இதன் பின்னர் உயர் இரத்த அழுத்தம் ஆபத்தானளவில் அதிகரித்ததால் அவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார்.
மேலும் இன்றைய தினம்(04.03.2023) அவர் உடல்நிலை சற்று நலமடைந்துள்ளதாகவும்,அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தற்போது அவர் சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
May you like this Video




