கனடா பிராம்டனில் முள்ளிவாய்க்கால் தூபி! பாராட்டும் சாள்ஸ் எம்.பி
கனடா - ஒன்டாரியோ மாநிலத்தின் பிரம்டன் நகர சபையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கனடா- ஒன்டாரியோ மாநிலத்தின் பிரம்டன் நகரசபையில் நேற்றைய தினம் நகரசபை உறுப்பினர் மாட்டின் என்பவரால் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு அடையாளமாக இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி அமைக்க வேண்டுமென பிரேரணையினை முன்மொழிந்து பிரம்டன் நகரசபை உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடன் ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை நிறைவேற்ற காரணமாக இருந்த மாட்டின் மற்றும் நகரசபை உறுப்பினர்களுக்கும் பாதிக்கபட்ட தமிழ் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அண்மையில் யாழ்.பல்கலைக்கழககத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கபட்ட போது உலகெங்கும் இருகின்ற தமிழ் உறவுகளுடைய அழுத்தங்களினால் பல நாடுகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில உறுப்பினர்கள் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் தூபி உடைப்பிற்கு எதிராக குரல் கொடுத்தார்கள்.
அதன் நிமித்தம் யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கபட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீண்டும் அமைக்கபடுகின்றது.அதன் அடிப்படையில் உலெகெங்கும் வாழும் தமிழ் மக்களின் முயற்சியின் காரணமாக நேற்றைய தினம் பிரம்டன் நகரசபையிலும் இத்தீர்மானம் நிறைவேறப்பட்டு இருக்கின்றது.
இலங்கை அரசாங்கம் ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்கள் உலகெங்கும் பறந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
முன்பு போல் எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது உலகெங்கும் இருகின்ற எங்களுடைய உறவுகள் கொதித்தெழுந்து அந்த நாட்டின் அரசாங்கங்களின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் வரும் என்பதை இலங்கை அரசாங்கம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இலங்கையில் இப்படியான தொடர்ச்சியாக நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் செய்துகொண்டு வருகின்றது. உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் முயற்சியால் அவர்களின் குரலால் அவர்கள் நாட்டில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில உறுப்பினர்களாக, நகரசபை உறுப்பினர்களாக மக்களால் தெரிவு செய்யபட்டு இருக்கின்றார்கள். அவர்களின் அழுத்தத்தின் ஊடாக இலங்கையில் பொது வாக்கெடுப்பு வைத்து தமிழ் மக்கள் இங்கு சுயநிர்ணய உரிமையுடன் வாழ அனைத்து தமிழ் உறவுகளினதும் ஒத்துழைப்பு அவசியமெனவும் தெரிவித்துள்ளார்.