சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சருக்கெதிரான நீதிப்பேராணை மனு ஒத்திவைப்பு
சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் நாடாளுமன்ற உறுப்பினராக தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
குறித்த மனு மீதான தீர்ப்பை நேற்று(18.10.2023) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் அடங்கிய குழு வழங்கியுள்ளது.
மாறுப்பட்ட தீர்ப்பு
கடந்த ஜூன் 6 ஆம் திகதியன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனு மீதான தீர்ப்பை ஜூலை 25 க்கு ஒத்திவைத்தது. எனினும் ஜூலை 25ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பின் போது அமர்வின் இரண்டு நீதியசர்களும் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து வழக்கு மூன்று பேரை கொண்டு நீதியரசர் குழாமுக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.