தேசபந்துக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் ஒத்திவைப்பு
தேசபந்து தென்னகோனை பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபராக நியமித்த தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஏழு அடிப்படை உரிமை மனுக்கள் எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
குறித்த தீர்மானத்தை இன்று(27.02.2024) உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அரசியலமைப்பு பேரவை
புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிப்பது தொடர்பில் அரசியலமைப்பு பேரவைக்கு இன்னும் அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே காலி முகத்திடலில் போராட்டக்காரர்களுக்கு எதிராக செயற்பட்டமை உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
