விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சட்டவிரோதமான வருமானம் தொடர்பான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றம்
2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தனது சம்பளம் மற்றும் சொத்துக்கள் மூலம் சம்பாதிக்க முடியாத அளவில் 75 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சம்பாதித்தமை சம்பந்தமாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.
வழக்கு ஒத்திவைப்பு
நேற்றைய தினம்(28) குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தது.
எனினும் தற்போதைய நிலையில் நீதிமன்ற செயற்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 18ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
