மலையக மக்களை ஏற்றிவந்த ஆதிலட்சுமி கப்பல் குறித்து மாணவி கேள்வி(Video)
டைட்டானிக்கப்பல் குறித்து பேசும் சமூகம் மலையக மக்களை ஏற்றிவந்து இந்து சமுத்திரக்கடலில் மூழ்கிய தமிழர்களின் ஆதிலட்சுமி என்னும் கப்பல் தொடர்பில் எத்தனைபேருக்கு தெரியும் என கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
வேர்களை மீட்டு உரிமை வென்றிட மாண்புமிகு மலையகம்' எனும் தொனிப்பொருளில் தலைமன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனிக்கு வலுச் சேர்க்கும் முகமாக கிழக்கு மாகாணத்தில் மாபெரும் பேரணி இன்று(08.08.2023) நடத்தப்பட்டது.
கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட சிவில் சமூக அமைப்புகளினால் இந்த பேரணி நடத்தப்பட்டது.
பொருளாதாரத்தை உயர்த்த நடவடிக்கை
காலை நடைபவனியாக ஆரம்பமான இந்த பேரணியானது சுமார் 18கிலோமீற்றர் நடைபவனியாக வந்து மட்டக்களப்பு காந்திபூங்காவில் நிறைவடைந்தது. 200 வருடங்களாக ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வரும் மலையக மக்களது உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த நடை பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பேரணியானது காந்திபூங்காவினை வந்தடைந்ததும் அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் 11கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனு வாசிக்கப்பட்டதுடன் அவற்றினை அரசாங்கத்திற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மலையக மக்களின் வீட்டு உரிமை, கல்வி உரிமை என இந்த நாட்டில் ஏனைய மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை வழங்க அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும் .என இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட
200வருடங்களுக்கு முன்னர் எவ்வாறு அடிமைகளாக இந்த நாட்டிற்கு மலையக மக்கள் கொண்டுவரப்பட்டார்களோ அதே அடிமைத்தனத்திலேயே இன்றும் மலையக மக்கள் உள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த பேரணியில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்இகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

இந்தியா மீதான 50% வரி: இது அரசியலமைப்பிற்கு எதிரானது! அமெரிக்க பொருளாதார நிபுணர் எதிர்ப்பு News Lankasri

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
