யாழில் தந்தை செல்வாவின் 49வது நினைவு நாள் அனுஷ்டிப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 49வது நினைவு நாள் நேற்றைய தினம்(26.04.2026) அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வாவின் நினைவுத் தூபியில் இடம்பெற்றுள்ளது.
ஜி.எல்.பீரிஸின் பேருரை
இதன்போது, தந்தை செல்வாவின் தூபிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டுள்ளதுடன், சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜி.எல் பீரிஸ் சமஷ்டி முறையும் அரசியலமைப்பு சீர்திருத்த பாதையும் எனும் தலைப்பில் நினைவுப் பேருரையாற்றியுள்ளார்.

நிகழ்வில், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், உள்ளிட்ட மூத்த அரசியல் பிரமுகர்கள், மத தலைவர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.










காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri