வவுனியாவில் நீரேந்து பிரதேசத்தை மறித்து அடாவடி: பொலிஸார் தலையீடு (Video)

Sri Lanka Police Vavuniya Sri Lanka
By Thileepan Jun 04, 2023 07:50 PM GMT
Report

வவுனியா - குருமன்காடு பகுதியை அண்மித்த குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தும் வகையில் சிலர் முன்னெடுத்து வரும் நடவடிக்கை காரணமாக பொது மக்களுக்கும் இரு குழுக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டினையடுத்து பொலிஸாரின் தலையீட்டினால் இந்த பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


வவுனியாவில் நீரேந்து பிரதேசத்தை மறித்து அடாவடி: பொலிஸார் தலையீடு (Video) | Adavadi Blocked Watershed Area In Vavuniya

வவுனியா, குருமன்காடு பகுதியை அண்மித்த பட்டானிச்சூர் புளியங்குளத்தின் நீரேந்து பிரதேசத்தை விடுமுறை நாட்களில் சிலர் கையகப்படுத்தி வேலி அடைத்துள்ளனர்.

இதனையடுத்து, 2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 83 ஆம் பிரிவின் பிரகாரம் பட்டானிச்சூர் புளியங்குளத்தின் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட வேலியினை அகற்றுவதற்கான கட்டளை வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாளர் பா.தேவரதன் என்பவரினால் கடந்த 08.05.2023 அன்று பிறப்பிக்கப்பட்டது.

அதில், வவுனியா கோவில்குளம் கமநல அபிவிருத்தி திணைககள பிரிவில் அமைந்துள்ள பட்டாணிச்சூர் கமநலசேவை நிலையத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பட்டானிச்சூர் புளியங்குளமானது கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான அளவை செய்யப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள குளமாகும்.

2013 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் 6 ஆம் திகதி அரச விடுமுறை தினங்களில் (இரவு நேரத்தில்) பட்டாணிச்சூர் புளியங்குளத்திற்குள் உள் நுழைந்து குளத்திற்குரிய ஒதுக்கீட்டுப் பிரதேசத்தில் விரோதமான முறையில் இனம் தெரியாதோர்களால் வேலி அடைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் நீரேந்து பிரதேசத்தை மறித்து அடாவடி: பொலிஸார் தலையீடு (Video) | Adavadi Blocked Watershed Area In Vavuniya

அதனால் 2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 38(4) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட 83(1) இன் பிரகாரம் அடைக்கப்பட்டவர்களாலே சட்ட விரோதமாக அடைக்கப்பட்ட வேலியை 22.05.2023 ஆம் திகதிக்கு முன்பு உடடியாக அகற்றுமாறு கட்டளை இடப்பட்டதுடன், அவர்களால் அகற்ற தவறின் 22.05.2023 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு பின்னரான தினத்திலோ கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கோவில்குளம் கமநல சேவை நிலையம் என்பவரால் பொருத்தமான நிறுவனங்களின் உதவியுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் அதற்கு செலவான நிதி உரிய சட்ட விரோத வேலியடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து அறவிடப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிறப்பிக்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டிருந்தமையுடன் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும், நேற்று (04.06) காலை குறித்த பகுதியில் உள்ள நீரேந்து பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் சமூகத்தினர் இணைந்து சட்டவிரோதமான முறையில் வேலி அமைக்கப்பட்ட பகுதியினுள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்ததுடன், மரக்கன்றுகளையும் நாட்ட முனைந்தனர்.

இதன்போது, வவுனியா மாவட்ட கமக்கார சம்மேளனங்களின் தலைவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த பகுதியின் சுத்தப்படுத்தும் நடவடிக்கையினை நிறுத்துமாறு தெரிவித்திருந்தார்.

வவுனியாவில் நீரேந்து பிரதேசத்தை மறித்து அடாவடி: பொலிஸார் தலையீடு (Video) | Adavadi Blocked Watershed Area In Vavuniya

எனினும் தொடர்ந்தும் சுத்தப்படுத்தும் நடவடிக்னக முன்னெடுக்கப்பட்டமையினால் தமிழ் இளைஞர்கள் அவ்விடத்தில் ஒன்று கூடி எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

இதனால் அவ்விடத்தில் பதட்டமான சூழ்நிலமை நிலவியதுடன் சில மணிநேர குழப்ப நிலமையினையடுத்து நிலமையினை வவுனியா பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், இரு தரப்பினனரயும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று இருவரிடமும் முறைப்பாட்டினை பெற்றனர்.

இவ்விடயத்தினை நீதிமன்றிக்கு எடுத்துச் செல்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US