மன்னார் - கிளிநொச்சி மாவட்டங்களில் களமிறங்கும் அதானி கிறீன் எனர்ஜி நிறுவனம்!
மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலைய செயற்றிட்டங்களை செயல்படுத்த, அதானி கிறீன் எனர்ஜி நிறுவனத்துக்கு தற்காலிக அனுமதியே வழங்கப்பட்டுள்ளதாக என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்று(28) செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
அதற்கமைய, குறித்த இடங்களில் இருந்து இந்த திட்டத்துக்கான எதிர்ப்புக்கள் வந்தால் அந்த எதிர்ப்புக்களின் பின்னணி தொடர்பில் ஆராய வேண்டும். அரசியல் பின்புலத்துடனும் அந்த எதிர்ப்புக்கள் வரக்கூடும்.
அமைச்சரவையின் முடிவுகள்

இந்த திட்டம் தொடர்பில் அந்தந்த மாவட்டப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்துவோம். அமைச்சரவையின் முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை வந்தால் அதையும் நாம் செய்வோம்.

அனைத்துச் செயற்றிட்டங்களும் மக்களின் நலன் கருதியே இருக்கும். மக்களுக்குப்
பாதிப்பு ஏற்படும் செயற்றிட்டங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்காது'' என தெரிவித்துள்ளார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan