100ஆவது ஒருநாள் போட்டியில் அடம் சம்பா!
அவுஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் அடம் சம்பா (Adam Zampa) தனது 100வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளார்.
அவுஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ரி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான ரி20 தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், ஒருநாள் தொடர் நாளை (19) தொடங்குகிறது.
169 விக்கெட்டுகள்
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிட்செல் ஸ்டார்க்கை தவிர்த்து அடம் சம்பா மட்டுமே அவுஸ்திரேலியாவுக்காக 100வது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளார்.
இதுவரை 99 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அடம் சம்பா 169 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
மேலும், இங்கிலாந்துக்கு எதிராக 12 போட்டிகளில் 21.57 சராசரியில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
முன்னாள் அணிதலைவர் ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்கைத் தொடர்ந்து, தற்போதைய அவுஸ்திரேலிய அணியில் சதத்தை எட்டிய மூன்றாவது வீரர் இவர் ஆவார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
