தென்னிந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக கொச்சைப்படுத்தப்படும் தமிழர்களின் போராட்டம்! பிரபல நடிகை காட்டம்
தென்னிந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக இலங்கையின் 30 வருட கால யுத்தம் கொச்சைப்படுத்தப்படுவதாக இலங்கையின் தமிழ் ஊடகத்துறையில் பல வருடங்களாக மிளிர்ந்து வருபவரும், இலங்கை தமிழ் மற்றும் சிங்களத் திரைப்படத் துறையில் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவருமான நடிகை நிரஞ்சனி சண்முகராஜா தெரிவித்துள்ளார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், யுத்தம் என்பது விளையாட்டல்ல. அதை வைத்து நாம் விளையாட முடியாது. எத்தனை உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.
எவ்வளது சொத்துக்கள் அழிக்கப்பட்டன. 30 வருடங்கள் நாம் அதற்குள் வாழ்ந்திருக்கிறோம், அந்த வேதனைக்குள் வடுக்குள் நாம் இருந்துள்ளோம்.
தென்னிந்தியாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக எங்களுடைய நாட்டில் நடந்த இந்த மாபெரும் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவே நாம் உணர்கிறோம் என கூறியுள்ளார்.