சஜித்தின் மேடையில் ஏறிய நடிகை தமிதா அபேரத்ன
போஷாக்கின்மை காரணமாக இலங்கையின் சிறார்கள் பாரதூரமான பல பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்து கல்லூரிக்கு பேருந்தை அன்பளிப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர்
கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரிக்கு பேருந்து ஒன்றை அன்பளிப்பு செய்யும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் மக்கள் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளரான நடிகை தமிதா அபேரத்னவும் கலந்துக்கொண்டார்.
அரசாங்கத்தில் இணையுமாறு விடுத்த கோரிக்கை நிராகரித்தேன்
இதனிடையே போராட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற எந்த அணியுடனும் இணைந்து செயற்பட தயார் எனவும் அரசாங்கத்தில் இணையுமாறு விடுத்த அழைப்பை நிராகரித்ததாகவும் தமிதா அபேரத்ன அண்மையில் கூறியிருந்தார்.
அரசாங்கத்தில் இணைந்தால், பெருந்தொகை பணத்தை வழங்குவதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
