இலங்கையைப் புகழ்ந்த தென்னிந்திய நடிகர்
நான்கு நாள் பயணமாக இலங்கை வந்தடைந்த தென்னிந்திய நடிகர் ஆர். சரத்குமார், நாட்டின் சுற்றுலா துறையைப் பாராட்டியுள்ளார்.
இலங்கையை ஒரு சுற்றுலா தலமாக மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக நடிகர் சரத்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கை அனைத்தையும் கொண்ட நாடு
இந்நிலையிவ், நேற்று கண்டிக்கு விஜயம் செய்தபோது, அந்தப் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய 07 நட்சத்திர ஹோட்டலைப் பார்வையிடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

இந்த ஹோட்டல் குறித்து நடிகர் கூறுகையில், இது உலகெங்கிலும் உள்ள ஹோட்டல்களைப் போன்ற 7 நட்சத்திர வசதிகளைக் கொண்ட ஹோட்டல் என்று கூறியுள்ளார்.
"இது மே அல்லது ஜூன் மாதங்களில் திறக்கப்படும். நான் அதைப் பார்க்கவே வந்தேன். கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் சேவைகள் உள்ளன.
மேலும், இலங்கை அனைத்தையும் கொண்ட ஒரு நாடு. இங்கே எல்லாம் கிடைக்கிறது. பனியைத் தவிர. மற்ற எல்லா காலநிலைகளும் இலங்கையில் உள்ளன” என்றும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |